3 முஸ்லிம் நாடுகள் வெளியிட்ட அறிவிப்பு

Saudi Arabia Kuwait
By Fathima Apr 06, 2023 10:24 PM GMT

திடீரென எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக பல நாடுகள் அறிவித்துள்ளன.

இந்த அறிவிப்பால் சர்வதேச எண்ணெய் சந்தையில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரபு நாடுகள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய சவுதி அரேபியா, ஈராக், குவைத் உள்ளிட்ட பல நாடுகள் எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக அறிவித்துள்ளன.

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

3 முஸ்லிம் நாடுகள் வெளியிட்ட அறிவிப்பு | Oil Production Saudi Kuwait Irak

சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு ஐந்து லட்சம் பீப்பாய்கள் குறைப்பதுடன் ஈராக் எண்ணெய் உற்பத்தியை 2,11,000 பீப்பாய்களாக குறைக்கிறது.

உற்பத்தி குறைப்பு அறிவிப்புக்கு பிறகு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.

ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை திங்கட்கிழமை வர்த்தகத்தின் தொடக்கத்தில் பீப்பாய்க்கு 5 டொலர்கள் வரை உயர்ந்தது. அதாவது, சுமார் 7 சதவிகித அதிகரிப்புடன் பீப்பாய் ஒன்றின் விலை 85 டொலர்களை எட்டியது.