வளைகுடாவில் அதிகரிக்கும் போர்பதற்றம்.. உச்சத்தை எட்டும் மசகு எண்ணெயின் விலை

Iran Crude Oil Prices Today Middle East Iran-US Conflict
By Sajithra Apr 28, 2026 02:17 AM GMT

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை காரணமாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிரடியாக உயர்வடைந்துள்ளது.

கடந்த ஏழு நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வரும் எண்ணெய் விலையானது, உலகளாவிய விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.

விடுக்கப்படும் எச்சரிக்கை 

சந்தை நிலவரப்படி, பிரெண்ட் வகை மசகு எண்ணெயின் விலை (Brent crude futures) 0.4 சதவீதத்தால் அதிகரித்து ஒரு பீப்பாய் 108.68 டொலராக உயர்ந்துள்ளது.

வளைகுடாவில் அதிகரிக்கும் போர்பதற்றம்.. உச்சத்தை எட்டும் மசகு எண்ணெயின் விலை | Oil Prices Higher Stalled Us Iran Talks

அதேபோல், அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ (WTI crude) எண்ணெய் விலையும் 0.6 சதவீதத்தால் உயர்ந்து 96.96 டொலராகப் பதிவாகியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் போக்கு தணியாத நிலையில், எண்ணெய் விலை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.