உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்
பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக, நாளைய தினம் (03) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளைய தினம் 2090 கடிதங்களை வகைப்படுத்தும் அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளதாக, சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், கடிதங்களை விநியோகிக்க 8000 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு
இந்த நிலையில், நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வீடு வீடாகச் சென்று உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கவுள்ளனர்.
மேலும், உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு அறிவிப்புப் பத்திரங்கள் எதிர்வரும் 07ஆம் திகதி வரை வீடு வீடாக விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |