உலக நாடுகளை உலுக்கிய ஒடிசா தொடருந்து விபத்திற்கான காரணம் வெளியானது
உலக நாடுகளை பெரும் சோகத்தில் ஆழ்த்திய ஒடிசா தொடருந்து விபத்திற்கான காரணம் வெளியானது.
கடந்த மாதம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கொரமண்டல் எக்ஸ்பிரஸ்தொடருந்து, ஒடிசாவின் புவனேஸ்வர் அருகே பஹாந்தா என்ற பகுதியில் வந்துகொண்டிருந்த போது, எதிரே வந்த சரக்கு தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தற்போது வரை 294 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 1000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
வெளியான காரணம்
இந்நிலையில், தொடருந்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வந்த நிலையில், தவறான வகையில் சிக்னல் வழங்கப்பட்டமையே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து தொடருந்து பாதுகாப்பு ஆணையம் சமர்பித்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிக்னல் இணைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் போது நிகழ்ந்த குறைபாடுகளே விபத்திற்கான காரணம் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |