ஒடிசா தொடருந்து விபத்து! இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட தகவல்
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்ற கோர தொடருந்து விபத்தில் இலங்கையர்கள் யாராவது பாதிக்கப்பட்டுள்ளனரா என ஆராய்ந்து வருவதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கொரமண்டல் எக்ஸ்பிரஸ்தொடருந்து, ஒடிசாவின் புவனேஸ்வர் அருகே பஹாந்தா என்ற பகுதியில் வந்துகொண்டிருந்த போது, எதிரே வந்த சரக்கு தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தற்போது வரை 288 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 1000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் விபத்தில் இலங்கையர் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக என்பது குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.