நோன்பு காலத்தில் சாதாரண தர பரீட்சை : முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples G.C.E. (O/L) Examination Festival
By Rakshana MA Dec 22, 2024 10:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

நோன்பு காலத்தில் சாதாரண தரப்பரீட்சையை நடாத்துவது அசௌகரியமானது, ஆகவே இது தொடர்பில் அரசாங்கமும் முஸ்லிம் எம்.பிக்களும் கவனம் செலுத்த வேண்டும் என அல்- மீஸான் பௌண்டஷன் தனியார் நிறுவனம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

மார்ச் மாதம் நடுப்பகுதியில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையை நடத்த பரீட்சை திணைக்களம் தீர்மானித்திருக்கும் இவ்வேளையில் அந்த காலமானது முஸ்லிம்களின் புனித நோன்பு காலமாக அமைந்துள்ளது.

இதன்படி, இந்த பரீட்சையை நோன்பு ஆரம்பிக்க முன்னர் அல்லது நோன்பு பொருநாள் முடிந்த பின்னர் நடத்த அரசாங்கம் முன்வர வேண்டும் என  ஜனாதிபதி, கல்வி அமைச்சராக உள்ள பிரதமர், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பரீட்சை திணைக்களம் ஆகியவற்றுக்கு கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பு : சட்டவிரோதமான மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை

பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பு : சட்டவிரோதமான மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை

கோரிக்கைக்கடிதம்

குறித்த இஸ்லாமிய நிறுவனத்தின் கோரிக்கை கடிதத்தில்,

உலகில் வாழும் இஸ்லாமியர்களின் புனிதமிகு மாதங்களில் ஒன்றான புனித ரமழான் என்பது அமல்கள் நிறைந்த மாதமாகும்.

நோன்பு காலத்தில் சாதாரண தர பரீட்சை : முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை | O L Exam In Fasting Period 2024

இந்த மாதத்தில் 13 மணித்தியாலயங்களுக்கு மேலாக பகல் நேரங்களில் முஸ்லிம்கள் நோன்பு நோற்றிருப்பதுடன் பகலிலும், இரவிலும் இறைவனை அதிகம் அதிகம் தொழும் மாதமாகும்.

அருட்கொடைகள் நிறைந்த இந்த மாதத்தில் முஸ்லிம்கள் நிறைய நன்மையான காரியங்களை செய்வதுடன் இரவு நேரத்திலும் நீண்ட நேரம் நின்று தொழும் காலமாகும்.

நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு : பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்!

நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு : பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்!

அமல்கள் நிறைந்த மாதம்

இந்த காலத்தில் பள்ளிவாசல்கள் சகலதிலும் மார்க்க சொற்பொழிவுகளும், வணக்க வழிபாடுகளிலும் மக்கள் ஈடுபடுவார்கள். இப்படியான சங்கை மிகுந்த காலத்தில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையை நடத்த பரீட்சை திணைக்களம் தீர்மானித்திருப்பது பொருத்தமற்ற செயலாக அமைந்துள்ளது என்ற விடயம் இப்போது முஸ்லிம்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

நோன்பு காலத்தில் சாதாரண தர பரீட்சை : முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை | O L Exam In Fasting Period 2024

பரீட்சை எழுதும் முஸ்லிம் மாணவர்களும், பரீட்சை கடமைக்கு செல்லும் முஸ்லிம் உத்தியோகத்தர்களும் நோன்பு காலங்களில் பரீட்சையை எதிர்கொள்வதும் பரீட்சைக்கு தயாராவதும் உடலியல் ரீதியாக மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாகவும், மார்க்க கடமைகளிலும் தாக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.

இதனால் இலங்கையின் தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லிங்களின் உணர்வுகளை மதித்து இலங்கை முஸ்லிங்களின் மார்க்கக்கடமைகளையும், கல்வி நடவடிக்கைகளையும் திருப்த்திகாரமாக முன்னெடுக்க இந்த பரீட்சை நேரசூசியில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கமும், குறித்த துறைக்கு பொறுப்பான திணைக்களங்களும் முன்வரவேண்டும் என்பதுடன் முஸ்லிம் கட்சிகள், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்தை பிரநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் கரிசனை செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாமாங்கம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் பலி

மாமாங்கம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் பலி

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை! அரசாங்கத்தின் தீர்மானம்

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை! அரசாங்கத்தின் தீர்மானம்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW