நுகேகொடை பேரணிக்கு வாழ்த்து! ரஞ்சித் மத்தும பண்டார

R M Ranjith Madduma Bandara Sri Lanka Politician Government Of Sri Lanka
By Fathima Nov 20, 2025 01:03 PM GMT
Fathima

Fathima

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் நடத்தும் நுகேகொடை பேரணிக்கு கலந்து கொள்ளப்போவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் நடத்தும் நுகேகொடை பேரணி தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதலளிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

பேரணிக்கு வாழ்த்து 

தொடர்ந்து பேசிய அவர்,''நானும் நுகேகொடையில் தான் இருக்கிறேன்.பேரணிக்கு நாம் வாழ்த்து தெரிவிக்கிறோம்.

நுகேகொடை பேரணிக்கு வாழ்த்து! ரஞ்சித் மத்தும பண்டார | Nugegoda Rally Ranjith Madduma Bandara

உயர் மட்ட குழுவில் பேரணியில் கலந்து கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது மூன்றாம் நபர்களுக்கு நாம் சொல்ல வேண்டியதில்லை. அவர்களுக்கு அது அவசியமில்லை என நினைக்கிறேன்.

ஐக்கிய தேசியக் கட்சி கலந்துகொள்ளட்டும்.அவர்கள் செய்வதை நாங்கள் செய்ய வேண்டியதில்லை.

இவை இரண்டு கட்சிகள்.கட்சியின் தீர்மானத்திற்கு உறுப்பினர்கள் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்.''என்று கூறியுள்ளார்.