நண்பர்களுக்கு நன்றி! நுகேகொட பேரணிக்கு பிறகு நாமல் வெளியிட்ட கருத்து
திறமையற்ற மற்றும் வஞ்சகமான அரசாங்கத்திற்கு எதிராகப் போராட தைரியம் கொண்ட எனது நண்பர்களுக்கு நன்றி என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நுகேகொட பேரணி முடிந்த பின்னர் தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
பேரணி
அநுரகுமார அரசாங்கத்தின் இந்த ஆட்சி ஒரு கொடுங்கோல் ஆட்சி இதற்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் என்று கூட்டு எதிரணியினர் இன்றையதினம் நுகேகொடையில் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

அதாவது இந்த நாட்டின் ஜனாதிபதி ஹிட்லர் போன்று செயற்படுவதாகவும் இந்த அரசாங்கம் சர்வாதிகாரம் செய்வதாகவும் மக்களை ஏமாற்றுவதாகவும் எதிரணியினர் குற்றம் சாட்டுகின்றன.
அதுமட்டுமன்றி தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்றும் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கும் வகையிலும் இன்றைய பேரணி ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவின் தலைமையில் நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்த அரங்கத்தில் இன்று இந்த பேரணி நடைபெற்றது.