பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி பெறும்: முஹம்மது ராபிக்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி திருகோணமலை மாவட்டத்தில் அமோக வெற்றியை பெறும் என அந்த மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற வேட்பாளர் முஹம்மது ராபிக் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை வெள்ளைமணல் பகுதியில் இன்று (26)இடம் பெற்ற மீனவர்களுடனான கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த பகுதி மக்கள் காணிப் பிரச்சினை கடல் தொழில் பிரச்சினை என பல கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர். இதற்காக காணிக்கான தனியான ஆணைக்குழு அமைத்து தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் தீர்வு வழங்கப்படும்.
ஜனாதிபதிக்கான ஆணை
மக்கள் தேசிய மக்கள் சக்தியை நம்பி ஜனாதிபதிக்கான ஆணையை வழங்கியுள்ளார்கள். அது போன்று இம் முறை நாடாளுமன்றத்திலும் ஆட்சி அமைக்கக் கூடிய பலத்தை மக்கள் நிச்சயமாக வழங்குவார்கள்.
அரசியலில் ஜாம்பவான்கள் என கூறிய பலர் சுமாராக 96 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் இந்த தேர்தல் போட்டியிடாது விலகியுள்ளார்கள்.இவர்கள் தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அரசியல் வியாபாரம் செய்யவோ திருடவோ முடியாது என்ற எண்ணத்தில் விலகியுள்ளார்கள்.
இது புதிய நாடாளுமன்றத்தின் பலத்தை எமக்கு காட்ட உதவும் .கடந்த காலத்தில் ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |