உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு

Election Commission of Sri Lanka Sri Lanka General Election 2024 Parliament Election 2024
By Laksi Oct 03, 2024 09:17 AM GMT
Laksi

Laksi

பொதுத் தேர்தலின் பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பில், 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பாக 22.08.2024 அன்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தேர்தல் ஆணைக்குழு உரிய மரியாதையுடன் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது.

உலக மது ஒழிப்பு தினம்: அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

உலக மது ஒழிப்பு தினம்: அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஜனநாயக உரிமை

இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழு தனது பங்களிப்பை முழுமையாக புரிந்து கொண்டு இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக செயற்படுகின்றது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு | Notification Regarding Local Council Elections

கடந்த ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட தேர்தலை நடத்துவதன் பங்கைக் கருத்தில் கொண்டு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை விரைவில் நிர்ணயம் செய்ய ஆணைக்குழு செயல்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் சிறுவர்களிடையே பல் நோய்கள் அதிகரிப்பு: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டில் சிறுவர்களிடையே பல் நோய்கள் அதிகரிப்பு: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாடாளுமன்ற தேர்தல் 

இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலுக்கு இடையே முன்னதாக தீர்மானிக்கப்பட்ட எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு | Notification Regarding Local Council Elections

மேலும் நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வாக்குச் சீட்டு கிடைத்தது! ரஞ்சன்

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வாக்குச் சீட்டு கிடைத்தது! ரஞ்சன்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW