பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் அல்லது பயிற்சிப் பட்டறைகள் அனைத்தும் இன்று நள்ளிரவு முதல் நிறுத்தப்பட வேண்டும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி குறித்த தடையானது பரீட்சை முடியும் வரை நடைமுறையில் இருக்குமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் 2 ,849 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளது.
அதன்படி, குறித்த பரீட்சை அன்றைய தினம் காலை 9.30 முதல் பிற்பகல் 12.15 வரை இடம்பெறவுள்ளது.
எனவே குறித்த காலப்பகுதியில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரக் கூட்டங்கள், பேரணிகள் போன்றவற்றை நடத்துவதைத் தவிர்க்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |