பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை தொடர்பில் வெளியான அறிவிப்பு

By Mayuri Oct 27, 2024 04:58 AM GMT

பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோக பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் கொழும்பு மாவட்டத்தில் குறித்த செயற்பாடுகள் இன்று இடம்பெறமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வாக்காளர் அட்டையுடன் வீடுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ள வேட்பாளர்களின் பெயர்ப்பட்டியல் இன்னும் அஞ்சல் திணைக்களத்திற்குக் கிடைக்கப் பெறவில்லை எனப் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித கே. ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர் அட்டை விநியோகம்

பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை தொடர்பில் வெளியான அறிவிப்பு | Notification Of Department Of Postal

அத்துடன், எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி, வாக்காளர் அட்டை விநியோகத்துக்கான விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 7ஆம் திகதிக்குள் வாக்காளர் அட்டைகள் கிடைக்காவிடின், அருகிலுள்ள அஞ்சல் நிலையத்துக்குச் சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தி, வாக்காளர் அட்டையைப் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW