இரவு வேளைகளில் அதீத சத்தத்துடன் வானம் ஓட்டுபவர்களுக்கான அறிவித்தல்

Sri Lanka Police Sri Lankan Peoples Eastern Province Kalmunai
By Rakshana MA Jan 18, 2025 04:33 AM GMT
Rakshana MA

Rakshana MA

காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார் சைக்கிள் ஓடுபவர்கள், மது போதையில் வாகனம் செலுத்துபவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்துபவர்கள் தலைக்கவசம் அணியாமல் ஓடுபவர்கள், வாகன அனுமதிப்பத்திரமில்லாமல் வாகனம் செலுத்துவோர் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அதிரடியாக கைது செய்யப்படுவர் என காரைதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர் எஸ்.ஜெகத் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தினை நேற்று(17) வெள்ளிக்கிழமை மாவடிப்பள்ளி ஜும்ஆாத் தொழுகையைத்தொடர்ந்து பள்ளிவாசலுக்கு வருகை தந்த அவர் மேலுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மோட்டார் சைக்கிள்களில் சாகசங்கள் செய்தல், இரவு நேரங்களில் இளைஞர் குழுக்கள் பெரிய சத்தங்களுடன் மோட்டார் சைக்கிள் ஓடுதல், வீதியில் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தல் போன்ற ஆபத்தை விளைவிக்கும் விதமாக மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துதல் என மக்களுக்கு இடையூறு விளைவித்து வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய சிஐடிக்கு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய சிஐடிக்கு அழைப்பு

நடவடிக்கை

மேலும், போக்குவரத்து விதிமுறைகள் சம்பந்தமாக மாவடிப்பள்ளி ஜும்ஆத் தொழுகையை தொடர்ந்து காரைதீவு பொலிஸ் பிரிவின் மாவடிப்பள்ளி பிரதேசத்திலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவர்.

இப்படிப்பட்ட ஆபத்துக்களை விளைவிக்கும் வகையில், யாரேனும் காணுமிடத்து போக்குவரத்து பொலிஸாரினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.  

இரவு வேளைகளில் அதீத சத்தத்துடன் வானம் ஓட்டுபவர்களுக்கான அறிவித்தல் | Notice To Skydivers With Excessive Noise At Night

இந்த நிலையில், அண்மையில் வீதி விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்களினால் பள்ளிவாசலுக்கு விசேட பயான் நிகழ்ச்ச்சிக்குச் சென்று வந்த இரு பெண்கள் வீதி விபத்துக்குள்ளாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அவர் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து மேலும், வீதிகளில் கூடி நிற்கும் வாலிபர்கள் சம்பந்தமாகவும் மற்றும் போதைப்பொருள் பாவனை, போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கெதிராக எடுக்கப்படும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் மேற்படி நபர்களுக்கெதிராக பள்ளி நிர்வாகத்தால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் பூரண தெளிவினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் : வெளியான போர் நிறுத்த அறிவிப்பு

காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் : வெளியான போர் நிறுத்த அறிவிப்பு

கொட்டித்தீர்த்த மழையால் வெள்ளக்காடான அம்பாறை! கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள்

கொட்டித்தீர்த்த மழையால் வெள்ளக்காடான அம்பாறை! கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


Gallery