சாதாரண தர பரீட்சையில் தோற்றியோருக்கு வெளியான அறிவிப்பு

Ministry of Education Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination Education
By Rukshy Sep 29, 2024 03:22 AM GMT
Rukshy

Rukshy

சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய ஒக்டோபர் 01 முதல் 15ஆம் திகதி வரை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியானது சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்

வெளியானது சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்

வெளியாகியுள்ள பெறுபேறுகள் 

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக நேற்று நள்ளிரவு வெளியாகி இருந்தன.

சாதாரண தர பரீட்சையில் தோற்றியோருக்கு வெளியான அறிவிப்பு | Notice To Passers In Ordinary Level Examination

தற்போது வெளியாகியுள்ள பெறுபேறுகள் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற விரும்பினால் 1911 அல்லது 011 2 785 922, 0112 786 616, 011 2 784 208 அல்லது 011 2 784 537 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை நாடளாவிய ரீதியில் 452,979 விண்ணப்பதாரர்கள் பங்குபற்றியுள்ளதோடு 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் இதில் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.   

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் அப்துல்லா மஹ்ரூப்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் அப்துல்லா மஹ்ரூப்

பொதுத்தேர்தல்: தபால் மூல வாக்காளர் விண்ணப்ப திகதி அறிவிப்பு

பொதுத்தேர்தல்: தபால் மூல வாக்காளர் விண்ணப்ப திகதி அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW