அரிசி உற்பத்தியில் முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய நடவடிக்கை
அடுத்த பருவத்தில் இருந்து நெல் பயிரிடும் ஆறு பிரதான விவசாயப் பகுதிகளில் இருந்து நாட்டுக்குத் தேவையான மொத்த அரிசியையும் உற்பத்தி செய்யும் திட்டத்தை விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், தற்போது அதிக நெல் விளைச்சலைக் கொடுக்கும் அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை , பொலன்னறுவை, கண்டி , அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய விவசாயப் பிரதேசங்களில் அதிக மகசூலைப் பெறுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டள்ளது.
இந்தநிலையில், ஆறு பகுதிகளில் அரிசி உற்பத்தியை இரட்டிப்பாக்குவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தேவையான அரிசி
அத்தோடு, தற்போது நாட்டின் வருடாந்த நுகர்வுக்கு தேவையான அரிசியின் அளவு 2.4 மில்லியன் மெட்ரிக் தொன்களாகும்.
இதில் 2024 ஆம் ஆண்டில் மொத்த தேசிய அரிசி தேவை 4.1 மில்லியன் மெட்ரிக் டன் ஆகும் இந்தநிலையில் 2023ஆம் ஆண்டில் 4.5 மில்லியன் மெற்றிக் தொன் நெல் அறுவடை செய்ய முடிந்துள்ளது.
இதன்படி, அரிசி உற்பத்தியானது எமது நாட்டின் தேசிய தேவையை விட அதிகமாக இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |