வட மத்திய மாகாண ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

North Central Province Education
By Mayuri Jul 18, 2024 11:50 AM GMT

வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேலதிக வகுப்புகளில் பணியாற்றுவதை முற்றாக தடை செய்வது தொடர்பிலான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பான சுற்றறிக்கையை வடமத்திய தலைமை அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

ஒழுக்காற்று நடவடிக்கை

இந்த சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களை பின்பற்றாத ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் அதிபர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என வடமத்திய மாகாண முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன அந்த சுற்றறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

வட மத்திய மாகாண ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை | Notice For North Central Province Teachers

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW