மொழி நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிமானது: வடக்கு மாகாண ஆளுநர்
மொழி என்பது இந் நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் நிலைத் தன்மையையும் உருவாக்குகின்ற ஒரு விடயமாக இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (29.09.2023) இரண்டாம் மொழிக் கற்கையை நிறைவு செய்த மாணவர்களுக்கு யாழ். சுதுமலை பகுதியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் வைத்து சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு வடக்கு மாகாண இணைப்பாளர் தே.பிரேமராஜா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பல்வேறு சவால்களுக்கும் பிரச்சினை
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையை பொறுத்தவரை மூன்று இன் மக்கள் வாழுகின்றோம். இரண்டு மொழிகள் மட்டும் தான் இருக்கின்றன.
இருந்தாலும் அதனூடாக நாங்கள் பல்வேறு சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்திருக்கின்றோம்.
அதாவது தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழியையும், சிங்கள மாணவர்களுக்கு தமிழ் மொழியையும் கற்பிக்கின்ற செயற்பாடானது முக்கியமான, ஒரு இன்றியமையாத செயற்பாடாக நாங்கள் பார்க்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.