வடக்கு மாகாணத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 32 ஆயிரம் வீட்டு திட்டத்திற்கான நிதி மூலத்திற்கு அங்கீகாரம்!

Sri Lanka Australia
By Kajinthan Sep 19, 2024 10:15 PM GMT
Kajinthan

Kajinthan

வடக்கு மாகாணத்தில் சன் பவர் குழுமத்தினால் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள 32 ஆயிரம் வீடுகளுக்கான நிதி மூலத்திற்குரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்த திட்டத்திற்கான நிதி அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட வங்கி ஒன்றின் ஊடாக வழங்கப்படவுள்ளது.

இந்த வீடுகள் தலா 50 இலட்சம் ரூபா செலவில் முற்றுமுழுதாக இலவசமாக பயனாளர்களுக்கு நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன.

புத்தளத்தில் பெருந்தொகையான கிருமி நாசினி மருந்துகள் மீட்பு

புத்தளத்தில் பெருந்தொகையான கிருமி நாசினி மருந்துகள் மீட்பு


32 ஆயிரம் வீட்டுத் திட்டம்

வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ள சன் பவர் குழுமத்தினால் சுமார் நான்காயிரம் ஏக்கர் காணியில் சூரிய மின்கல பூங்கா (Solar Park) நிர்மாணிக்கப்படவுள்ளது.  இதற்கான முழுமையான காணி விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. 

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை கடன் விடுவிப்பு தொடர்பான சான்றுபடுத்தல் பெறப்படவுள்ளது. 

வடக்கு மாகாணத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 32 ஆயிரம் வீட்டு திட்டத்திற்கான நிதி மூலத்திற்கு அங்கீகாரம்! | Northern Province 32000 Housing Projects

இந்த இரண்டு செயற்பாடுகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இலவச வீட்டு திட்டத்திற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்போது, வீடுகள் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டதன் பின்னரே பயனாளர்களிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்திற்குரிய முன்மொழிவிற்கான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மீது பொலிஸார் விசேட அவதானம்

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மீது பொலிஸார் விசேட அவதானம்

மட்டக்களப்பில் தேர்தல் கடமைகளுக்காக 6750 அரச உத்தியோகத்தர்கள்

மட்டக்களப்பில் தேர்தல் கடமைகளுக்காக 6750 அரச உத்தியோகத்தர்கள்