வடக்கு மாகாண சுகாதார துறையில் பாரிய ஊழல் மோசடி: பொதுமக்கள் குற்றச்சாட்டு

Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples Northern Province of Sri Lanka
By Independent Writer Jul 11, 2024 01:18 PM GMT
Independent Writer

Independent Writer

2009ஆம் ஆண்டின் பின்னர் வடக்கு மாகாண சுகாதார துறையில் இடம்பெற்ற பல ஊழல் மோசடிகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் அவை தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததன் விளைவே தொடர்ச்சியான மோசடிகளுக்கு காரணமாக அமைந்துள்ளது என பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வடக்கு மாகாண சுகாதார துறை மீது நீண்ட காலமாக ஏராளமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறன. அவற்றில் பலவற்றுக்கு விசாரணைகளும் இடம்பெற்றுள்ளன.

பல ஊழல் மோசடிகளுக்கு மாகாண கணக்காய்வுத் திணைக்களம், தேசிய கணக்காய்வு அலுவலகம் என்பன கணக்காய்வுகளை மேற்கொண்டு அவற்றை உறுதி செய்து அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தன.

குற்ற பத்திரிகை

குறித்த அறிக்கைகளின் அடிப்படையில் ஆரம்ப புலன் விசாரணை குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகளும் இடம்பெற்றன.

வடக்கு மாகாண சுகாதார துறையில் பாரிய ஊழல் மோசடி: பொதுமக்கள் குற்றச்சாட்டு | Northen Provincial Medical Illeagal Activities

இதன் போதும் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு ஊழல் மோசடிகளில் ஈடுப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தயாரிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், இவை எவற்றுக்கும் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஊழல் மோசடிகளில் ஈடுப்பட்டவர்கள் தாங்களாகவே இடமாற்றம் பெற்று வேறுத் திணைக்களங்களுக்கு சென்றமை, பதவி உயர்வு பெற்றுச் சென்றமை என அவர்கள் அதிலிருந்து தப்பித்து கொண்டனர்.

இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாமையே, சுகாதார துறையில் தொடர்ச்சியாக ஊழல்கள் இடம்பெறுகின்றமைக்கு காரணமாக அமைந்துள்ளது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.  

மேலும், கிளிநொச்சி மாவட்ட சுகாதார துறையில் கோவிட் காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் மாகாண கணக்காய்வுத் திணைக்களம் மற்றும் தேசிய கணக்காய்வு அலுவலகம் ஆய்வு செய்து ஊழல்களை நிரூபித்திருந்தது.

புலன் விசாரணை 

இதன் தொடர்ச்சியாக நியமிக்கப்பட்ட ஆரம்ப புலன் விசாரணை குழுவும் விசாரணைகளை மேற்கொண்டு ஊழல் மோசடிகளை உறுதி செய்து அதில் ஈடுப்பட்டவர்களான பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் மூன்று உத்தியோகத்தர்கள் மீது குற்ற பத்திரிகையும் தயாரிக்கப்பட்டு உரிய மேலதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

வடக்கு மாகாண சுகாதார துறையில் பாரிய ஊழல் மோசடி: பொதுமக்கள் குற்றச்சாட்டு | Northen Provincial Medical Illeagal Activities

ஆனால், 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற இந் நடவடிக்கைக்கு இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவி உயர்வு பெற்றதுடன் கணக்காளர் முல்லைத்தீவு வலயக் கல்வித் திணைக்களத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளார். அவ்வாறே ஏனைய ஊழியர்களும் இதிலிருந்து தப்பித்துக்கொண்டனர்.

இதில் சம்மந்தப்பட்ட கணக்காளர் முல்லைத்தீவு வலயக் கல்வித் திணைக்களத்திலும் மோசடிகளில் ஈடுப்பட்டதாக அண்மையில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். 

வடக்கு மாகாண சுகாதார துறையில் பாரிய ஊழல் மோசடி: பொதுமக்கள் குற்றச்சாட்டு | Northen Provincial Medical Illeagal Activities

அவ்வாறே கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றின் பெண் அதிபரின் ஊழல் மோசடிகள் தொடர்பிலும் மாகாண மற்றும் தேசிய கணக்காய்வு அலுவலகங்கள் கணக்காய்வு ஊழல் மோசடிகளை உறுதிப்படுத்தியிருந்தன.

அந்த அறிக்கைகள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன. இருந்தும் அவர் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது அவர் ஓய்வுப்பெற்றுள்ளார்.

எனவே, இவ்வாறு நிரூபிக்கப்பட்ட ஊழல் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமையின் விளைவே வடக்கு சுகாதார துறை உட்பட எல்லாத் துறைகளிலும் தொடர்ச்சியாக ஊழல் மோசடிகள் இடம்பெற காரணம் என பொதுமக்களால சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

GalleryGalleryGallery