வடக்கு மாகாண ஆளுநரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

Ramadan Nagalingam Vedanayagam
By Kajinthan Mar 31, 2025 06:52 AM GMT
Kajinthan

Kajinthan

புனித ரமழான் மாதத்தின் நிறைவை குறிக்கும் நோன்புப் பெருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் இந்நாளில் வடக்கு மாகாண மக்களுக்கும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ரமழான் மாதம் முழுவதும் நீங்கள் கடைப்பிடித்த நோன்பும், பக்தியும், இரக்கமும், சமூக ஒற்றுமையையும் விளக்குகிறது.

இத்தகைய நேரம் பகிர்ந்தளிக்கவும், ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கவும், சமூக ஒற்றுமையை வலுப்படுத்தவும் ஒரு அரிய சந்தர்ப்பமாக அமைகிறது.

முட்டை விலை குறித்து வெளியான தகவல்

முட்டை விலை குறித்து வெளியான தகவல்

நோன்புப் பெருநாள் வாழ்த்து

நாம் அனைவரும் மகிழ்ச்சி, அமைதி, சகோதரத்துவம், மனிதாபிமானம் ஆகியவற்றை பேணிச் செலுத்தி, ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழவேண்டும்.

வடக்கு மாகாண ஆளுநரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி! | North Governer Wish Happy Eid Mubarak

இந்தப் புனித நாளில் உங்கள் குடும்பங்களுக்குத் துன்பங்கள் நீங்கி, வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி நிலவிக்கண்டிட என் இருகரம் கூப்பி வாழ்த்துகிறேன்.

உங்கள் அனைவருக்கும் இனிய நோன்புப்பெருநாள் நல்வாழ்த்துக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி: இம்ரான் எம்.பி

நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி: இம்ரான் எம்.பி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW