சமூக வலைத்தளங்களில் வெளியான மற்றொரு பரீட்சை வினாத்தாள்

Ministry of Education North Central Province Education
By Laksi Jan 06, 2025 08:09 AM GMT
Laksi

Laksi

வட மத்திய மாகாணத்தில் 11ம் தர தவணைப் பரீட்சை தொடர்பான வினாத்தாள் ஒன்று பரீட்சைக்கு முன்னரே வெளியாகியுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் சிறிமெவன் தர்மசேன தெரிவித்துள்ளார்.

இதன்போது, 11ஆம் தர சிங்கள இலக்கிய வினாத்தாளே சமூக வலைத்தளங்கள் ஊடாக நேற்று (05.01.2025) நள்ளிரவு வெளியாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக இன்று (06) நடைபெறவிருந்த இறுதிப் பரீட்சை பிற்போடப்பட்டதாக மாகாண கல்விச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

திறைசேரி உண்டியல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்

திறைசேரி உண்டியல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்

நடவடிக்கை

அதன்படி இன்று காலை 8.00 மணியளவில் 08 வலயங்களில் உள்ள 30 பிரிவுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் உரிய வினாத்தாள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெளியான மற்றொரு பரீட்சை வினாத்தாள் | North Central Province Term Exam Paper Leaked

அதேநேரம், பரீட்சை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு மற்றுமொரு வினாத்தாள் வழங்கப்படும் சிறிமேவன் தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த முறைகேடு எவ்வாறு இடம்பெற்றது என்பதை கண்டறிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மாகாண கல்விச் செயலாளர் சிறிமெவன் தர்மசேன தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் கனரக வாகனம் தடம்புரண்டு விபத்து

திருகோணமலையில் கனரக வாகனம் தடம்புரண்டு விபத்து

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW