நோர்வூட்டில் மதுபானசாலைக்கு எதிராகக் கொதித்தெழுந்த மக்கள் - கறுப்புக்கொடி ஏந்தி வர்த்தக நிலையங்களை மூடிப் போராட்டம்

Tamils Nuwara Eliya Crime Sri lanka Tamil News Protest
By Rakesh May 06, 2026 04:35 PM GMT

 நோர்வூட் நகரில் புதிதாகத் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நோர்வூட் நகரம் முழுவதும் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டு, வர்த்தக நிலையங்கள் அடைக்கப்பட்டு பாரிய மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது இன்று(06.05.2026) இடம்பெற்றுள்ளது.

மதுபானசாலை திறக்கப்படக் கூடாது

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் அமைந்துள்ள நோர்வூட் நகரில் ஏற்கனவே மூன்று மதுபானசாலைகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், நான்காவதாக ஒரு மதுபானசாலையைத் திறப்பதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளமைக்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

நோர்வூட்டில் மதுபானசாலைக்கு எதிராகக் கொதித்தெழுந்த மக்கள் - கறுப்புக்கொடி ஏந்தி வர்த்தக நிலையங்களை மூடிப் போராட்டம் | Norhood People Protest

இதகையடுத்து, புதிதாக மதுபானசாலை அமையவுள்ள கட்டடத் தொகுதியில் தொழிற்சங்க அலுவலகம் ஒன்றும், தனியார் கல்வி வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன.

இங்கு மதுபானசாலை திறக்கப்பட்டால், கல்வி கற்க வரும் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கும், ஒழுக்கச் சீர்கேடுகளுக்கும் முகம் கொடுக்க நேரிடும் எனப் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

நோர்வூட்டில் மதுபானசாலைக்கு எதிராகக் கொதித்தெழுந்த மக்கள் - கறுப்புக்கொடி ஏந்தி வர்த்தக நிலையங்களை மூடிப் போராட்டம் | Norhood People Protest

நோர்வூட் பகுதியில் பல வருடங்களாக நிலவும் குடிதண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாத அதிகாரிகள், மதுபானசாலை திறப்பதற்கு மட்டும் எவ்வாறு துரிதமாக அனுமதி வழங்கினர்? என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கேள்வியெழுப்பி இருந்தனர்.

அத்துடன், மது அரக்கர்களை நோர்வூட்டுக்குள் விடமாட்டோம், ஒழுக்கத்தைப் பாதுகாப்போம், மது வேண்டாம், அமைதி வேண்டும் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் நோர்வூட் பொலிஸ் நிலையம் வரை பேரணியாகச் சென்றனர்.

நோர்வூட்டில் மதுபானசாலைக்கு எதிராகக் கொதித்தெழுந்த மக்கள் - கறுப்புக்கொடி ஏந்தி வர்த்தக நிலையங்களை மூடிப் போராட்டம் | Norhood People Protest

குறித்த மதுபானசாலையைத் திறப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்துச் செய்ய ஜனாதிபதி தலையிட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, நோர்வூட் சிவசுப்ரமணிய ஆலய நிர்வாகத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்குப் பதிலளித்துள்ள செயலகம், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு மதுவரித் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஆனால், அந்த மதுபானசாலை முழுமையாக மூடப்படும் வரை தமது போராட்டம் தொடரும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.