சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் கல்விசாரா ஊழியர் சங்கம்
Sri Lanka
By Mayuri
இன்று முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கல்விசாரா ஊழியர் சங்கத்தின் செயலாளர் அஜித். கே. திலகரத்ன குறிப்பிட்டுள்ளார்.
தேசிய கல்விசாரா சேவை கொள்கைகளை செயற்படுத்துவதாக கல்வியமைச்சர் வாக்குறுதிகளை வழங்கியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சருடன் கலந்துரையாடல்கள்
இது தொடர்பில் கல்வி அமைச்சருடன் பல தடவைகள் கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போதிலும் அதிகாரிகள் இதனை செயற்படுத்துவதற்கு தாமதித்து வருகின்றனர்.
குறித்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமெனக் கோரி இன்று முதல் சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கல்விசாரா ஊழியர் சங்கத்தின் செயலாளர் அஜித் கே. திலகரத்ன குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |