அடுத்த ஆண்டு நோபல் பரிசு ட்ரம்ப்க்கு; அடித்து சொல்லும் இஸ்ரேல்
அடுத்த ஆண்டு ட்ரம்ப்க்கு நிச்சயம் நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.
நேற்று இஸ்ரேல் சென்ற அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை இஸ்ரேல் வரவேற்றிருந்தது.
இந்நிலையில், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் இஸ்ரேல் சபாநாயகர் அமீர் ஓஹானா உரையாற்றிய போது, "அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப்பை விட யாரும் தகுதியானவர் இல்லை, அடுத்த ஆண்டு இஸ்ரேல் அவரைப் பரிந்துரைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும்
அது மட்டுமல்லாது இஸ்ரேலுக்கு ட்ரம்ப் அளித்த ஆதரவுக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈரான் உடனான 12 நாள் போரின் போதும், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையேயான போர் நிறுத்தத்தை அடைவதற்கான முயற்சிகளும் ட்ரம்பால் மேற்கொள்ளப்பட்டவைதான்" என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், இந்தியா-பாகிஸ்தான் போர் உட்பட, ஏராளமான போரை நிறுத்தியிருக்கிறேன். எனவே எனக்கு நோபல் பரிசு வேண்டும்" என்றுட்ரம்ப் தொடர்ந்து கோரி வந்தார்.
ஆனால் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு டிரம்ப்க்கு வழங்கப்படவில்லை. இந்தநிலையிலேயே, அடுத்த ஆண்டு ட்ரம்ப்புக்கு நிச்சயம் நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.
ட்ரம்ப்க்கு பாராட்டு
இந்நிலையில், நோபல் பரிசு அறிவிக்கப்படும் சந்தர்ப்பம் எதிர்பார்த்து, காசா போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அழுத்தம் கொடுக்க, போர் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இஸ்ரேல் பிரதமர் பேசுகையில், "வெள்ளை மாளிகையில் இஸ்ரேலுக்குக் கிடைத்த மிகச் சிறந்த நண்பர். எந்த ஒரு அமெரிக்க ஜனாதிபதியும் இஸ்ரேலுக்காக இவ்வளவு செய்ததில்லை. இந்த அமைதிக்கு நீங்கள் உறுதிபூண்டுள்ளீர்கள், நானும் உறுதிபூண்டுள்ளேன், சேர்ந்து நாம் அமைதியை அடைவோம்.
அத்துடன், ட்ரம்ப்பின் போர் நிறுத்தத் திட்டம், எங்கள் பணயக்கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு பத்திரமாக கொண்டு வருகிறது. எங்கள் இலக்குகள் அனைத்தையும் அடைந்து, போரை முடிவுக்குக் கொண்டுவருகிறது. எங்கள் பிராந்தியத்திலும், அதற்கு அப்பாலும் அமைதியின் விரிவாக்கத்திற்கான கதவைத் திறக்கிறது" என்று ட்ரம்ப்யை புகழ்ந்து பாராட்டி இருக்கிறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |