அமைதிக்கான நோபல் பரிசு: ட்ரம்புக்கு அர்ப்பணித்த மச்சாடோ
தனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசை டொனால்ட் ட்ரம்புக்கு அர்ப்பணிக்கிறேன் என மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வரிசையில், அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழு போர்
இதனடிப்படையில், இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட ஏழு போர்களை கடந்த ஆறு மாதங்களில் நிறுத்தியதாகவும் அதனால் தனக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்து வந்தார்.
அத்தோடு, தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்றும் அவர் எதிர்ப்பார்த்திருந்தார்.
நோபல் பரிசு
டொனால்ட் ட்ரம்பிற்கு நோபல் பரிசு வழங்கப்படாத நிலையில், அமைதியை விட அரசியலுக்கு முக்கியத்துவம் என்பதை மீண்டும் ஒருமுறை நோபல் கமிட்டி நிரூபித்துள்ளது என வெள்ளை மாளிகை விமர்சித்துள்ளது.
இந்தநிலையில், தனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்புக்கும் அர்ப்பணிக்கிறேன் என நோபல் பரிசு வென்ற வெனிசுலா எதிர்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா மக்களுக்கும் எனக்கு தொடர்ந்து உறுதியான ஆதரவை அளித்துவரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் அர்ப்பணிக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |