மறுக்கப்பட்ட நோபல் பரிசு! வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தி
அமைதியை விட அரசியலுக்கு முக்கியத்துவமா என நோபல் பரிசு குழுவிடம் வெள்ளை மாளிகை கேள்வி எழுப்பியுள்ளது.
வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினோ மச்சாடோ 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு தெரிவாகியுள்ளார்.
இதன்படி ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்ட விவகாரத்தில் மரியாவையும், நோபல் தெரிவு குழுவினரையும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங் கடுமையாக சாடியுள்ளார்.
அமைதியைவிட அரசியலுக்கு
இந்நிலையில் வெள்ளை மாளிகயின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங்கின் மேலும் தெரிவிக்கையில், "அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து பல போர்களை முடிவுக்கு கொண்டுவருவார்.
அமைதி ஒப்பந்தங்களை மேற்கொள்வார், உயிர்களைக் காப்பாற்றுவார். அவர் மனிதாபிமானமிக்கவர், அவரின் முழு சக்தியால் மலைகளைக்கூட நகர்த்தும் வல்லமை மிக்கவர், அவரைப் போல யாரும் இருக்க மாட்டார்கள்.
நோபல் குழுவினர் அமைதியைவிட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பதை நிரூபித்துவிட்டனர்" என பதிவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |