தென் பிராந்தியங்களிலிலுள்ள இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்
அண்மையில் இஸ்ரேலிய (Israel) வான்வழி தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட தென் பிராந்தியங்களில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பெய்ரூட்டில் (Beirut) உள்ள இலங்கை (Sri Lanka) தூதரகம் தெரிவித்துள்ளது.
லெபனானுக்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கபில ஜெயவீர (Kapila Jayaweera) இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.
பாதுகாப்பு முகாம்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் உள்ள அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தற்போது 15 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடுமையான தாக்குதல்
அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கபில ஜெயவீர உறுதியளித்துள்ளார்.
லெபனான் (Lebanon) தலைநகர் ஒரு வாரத்திற்கும் மேலாக கண்ட மிகக் கடுமையான தாக்குதலில், பெய்ரூட்டில் குறைந்தது ஒரு டஜன் வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |