அரிசி தட்டுப்பாடு தொடர்பில் விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
Sri Lanka
By Mayuri
அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மேலும்,
இம்முறை சிறுபோகத்தின் போது 2 மில்லியன் டொன் நெல் அறுவடை செய்யப்படும்.
நெற்செய்கை
4 இலட்சத்து 80,000 ஹெக்டயர் வயல் நிலப்பரப்பில் 77 சதவீதம் நாடு நெற்செய்கை பண்ணப்பட்டுள்ளது.

11 சதவீதம் சம்பா நெற்செய்கையும், 12 சதவீதம் கீரி நெற்செய்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெரும்போக நெல் அறுவடையும் நாட்டில் இருப்பதால் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |