எரிபொருள் நெருக்கடி: பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்
Fuel Price In Sri Lanka
Sri Lanka Fuel Crisis
Anil Jayantha Fernando
By Laksi
நாட்டில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு எதுவும் இல்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த (Anil Jayantha) தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்று (01) நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் நெருக்கடி
அத்தோடு, நாட்டில் எரிபொருள் நெருக்கடி இருப்பதாகக் காட்ட சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் ஒரு செயற்கை எரிபொருள் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாக அனில் ஜெயந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவும் நாட்டில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவவில்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |