வாகன இறக்குமதி குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு
Bandula Gunawardane
vehicle imports sri lanka
By Fathima
நாட்டில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் காரணமாக தற்போதைக்கு வாகன இறக்குமதி சாத்தியமில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவையின் பேச்சாளர் பந்துல குணவர்தன இது தொடர்பில் அறிவித்துள்ளார்.
குறிப்பிடத்தக்க காலத்திற்கு வாகனம் இறக்குமதி செய்வது சாத்தியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதிக் கட்டுப்பாடு
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்த கட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி கட்டுப்பாடுகளை கிரமமாக எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து இலங்கை மத்திய வங்கி அமைச்சரவைக்கு அறிவிக்கும் என தெரிவித்துள்ளார்.