பல கோடி ரூபா செலவில் குடிசன மதிப்பீடு
மக்கள் மறுமலர்ச்சி முன்னனி கட்சியின் தலைவரும் யாழ் மாநகரசபை முன்னால் உறுப்பினர் B.A.S சுபியான் மௌலவி அவர்களினால் ஊடக சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த ஊடக சந்திப்பானது புத்தளம் தில்லையடியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (17.07.2023) இடம்பெற்றது.
தேர்தலுக்கு பணம் இல்லை
குடிசன மதிப்பீட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ அவர்கள் எதிர்வருகின்ற செப்டம்பரில் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் அதற்கு பல கோடி ரூபா செலவு போகும் எனவும் தெரிவித்த நிலையில் தேர்தலை நடாத்துவதற்கு பணம் இல்லையென்று கூறிய அரசாங்கத்திற்கு தற்பொழுது பணம் எங்கிருந்து வருன்றது எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
ரணில் நாளை இந்திய பிரதமர் மோடியை சந்திக்க உள்ள நிலையில் வடகிழக்கு முஸ்லிம்களை பற்றி 13வது சீர்த்திருத்தச் சட்டதில் உள்ளடக்கவில்லை என்ற கருத்தையும் முன்வைத்துள்ளார்.
அத்துடன் பல விடயங்களை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |