முச்சக்கர வண்டி கட்டணம் குறித்த விசேட அறிவித்தல்
முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்கள் குறைக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் பெற்றோலின் விலை குறைக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழில் பணியாளர்கள் தேசிய ஒன்றியம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
92 ஒக்டேன் ரக ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விலை குறைப்பு போதுமானதல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மிகச் சிறிய அளவிலான விலை குறைப்பு என்பதனால் கட்டணங்களை குறைக்க முடியாது என தெரிவித்துள்ளது.
கோட்டா முறையில் பெற்றோல் பெற்றுக் கொள்வதனால் வரையறுக்கப்பட்ட அளவிலான பெற்றோலையே பெற முடிவதாகவும், மேலதிகமான பெற்றோலை சட்டவிரோதமான முறைகளில் பெற்றுக் கொள்ள நேரிட்டுள்ளதாகவும் முச்சக்கர வண்டி சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே கட்டணக்குறைப்பு சாத்தியமில்லை என ஒன்றியத்தின் செயலாளர் ரோஹன பெரேரா தெரிவித்துள்ளார்.