சர்வதேச நாணய நிதிய கடன் ஒப்பந்தத்தில் மாற்றம் இல்லை! பந்துல குணவர்தன

Bandula Gunawardane
By Mayuri Aug 06, 2024 10:54 AM GMT
Mayuri

Mayuri

சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது நடைமுறையில் உள்ள கடன் ஒப்பந்தம் தேர்தல் அல்லது ஏனைய விடயங்களைப் பொருட்படுத்தாது 2027ஆம் ஆண்டு வரை அதே வழியில் செயற்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்னும் சில மாதங்களில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக யார் இருந்தாலும் சரி, யார் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் சரி, கடன் ஒப்பந்தத்தில் மாற்றம் ஏற்பட்டால், 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை உருவாக்க முடியாது.

சர்வதேச நாணய நிதிய கடன் ஒப்பந்தத்தில் மாற்றம் இல்லை! பந்துல குணவர்தன | No Change In Imf Loan Agreement Due To Election

சர்வதேச நாணய நிதியத்தில் கையொப்பமிட்டுள்ள உடன்படிக்கை

வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற, தற்போதுள்ள நிதி அமைச்சர் மற்றும் நிதி அமைச்சும் சர்வதேச நாணய நிதியத்தில் கையொப்பமிட்டுள்ள உடன்படிக்கைக்கு அமைய, 2025ஆம் ஆண்டளவில் 5018 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு வள இடைவெளி இருக்கும் என்று மதிபீடு செய்யப்பட்டுள்ளதுடன், அதில் 663 மில்லியன் நிதியை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களும், உலக வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஆசிய அபிவிருத்தி வங்கி 300 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், எமக்கு 3855 மில்லியன் நிவாரணம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW