வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்களின் தடையை நீக்கவுள்ள இலங்கை: அலிசப்ரி
இலங்கை துறைமுகங்களுக்கு வருகைத் தரும் வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு, அடுத்த ஆண்டு முதல் தடை விதிக்கப்படாது என இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஜப்பான் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ‘‘கடந்த ஜனவரி மாதம் முதல், ஒரு வருடத்திற்கு வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்கள், தமது துறைமுகங்களுக்கு வருவதை இலங்கை அரசாங்கம் தடை செய்தது.
வெளிநாட்டு ஆராச்சி கப்பல்கள்
2022 இல் சீன கண்காணிப்புக் கப்பலின் இலங்கைத் துறைமுக அழைப்பு தொடர்பில் அண்டை நாடான இந்தியா அதிருப்தியை காட்டிய பின்னர் இந்த தடை நடைமுறைக்கு வந்தது.
இந்தநிலையில், தமது அரசாங்கம் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு விதிகளை வைத்திருக்க முடியாது என்றும் சீனாவை(China) மட்டும் தடுக்க முடியாது.
இலங்கையில் பயன்படுத்தப்படாத கடல் வளங்கள் இருப்பதாகவும், ஆராய்ச்சி மிகவும் அவசியமானது என்றும், ஆனால் அது வெளிப்படையான முறையில் செய்யப்பட வேண்டும்.
இதற்கிடையில் மற்றவர்களுக்கு இடையே ஏற்படும் சர்ச்சையில் தனது நாடு பக்கச்சார்பாக இருக்காது’’என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |