9 வயது சிறுமி தவறான முடிவால் உயிரிழப்பு....! கைத்தொலைபேசியால் நேர்ந்த விபரீதம்

Sri Lanka Police Colombo Death
By Fathima Nov 02, 2023 10:37 AM GMT
Fathima

Fathima

மருதானை பகுதியில் கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் கொழும்பு - மருதானையில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் மருதானை பிரதேசத்தை சேர்ந்த 9 வயது சிறுமி என தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமியின் மரணம்

உயிரிழந்த சிறுமியின் சடலம் கொழும்பு - பொரல்லை சிறுவர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறுமியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமிக்கு கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகிப்பதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.