மரபுரிமை சின்னமாக பெயரிடப்படும் தெமோதரை ஒன்பது வளைவுப் பாலம்

Sri Lanka Sri Lanka Government
By Sachi Apr 06, 2023 07:16 AM GMT

தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தை (Nine Arches Bridge) தேசிய மரபுரிமை சின்னமாக பெயரிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த பாலத்தை பாதுகாத்து, அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்துள்ளார்.

மரபுரிமை சின்னமாக பெயரிடப்படும் தெமோதரை ஒன்பது வளைவுப் பாலம் | Nine Arches Bridge

தொல்பொருள் திணைக்களம்

பிரித்தானியப் பேரரசு இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் பிரித்தானிய புகையிரத சேவைகளின் கட்டுமானங்களில் சிறப்பு எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக தெமோதரை ஒன்பது வளைவுப் பாலம் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.