நாட்டிலுள்ள இளைஞர்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவித்தல்
கிராமிய அபிவிருத்தி அமைச்சு மற்றும் பிற அமைச்சுகளின் ஒத்துழைப்புடன், குறைந்த வருமானம் குடும்பங்களுக்காக "Next Sri Lanka" என்ற புதிய தேசியத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட 200,000 குடும்பங்களைச் சேர்ந்த 50,000 இளைஞர்கள் தொழில்முறை திறன்களை வழங்கி தொழில் வாய்ப்புகள் பெற்றிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பயிற்சி திட்டம்
குறித்த திட்டம் ஜூலை 15 ஆம் திகதி முதல் ஜூலை 23 ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலக அலுவலகங்களில் தொழில் வழிகாட்டி அமர்வுகள் (career guidance sessions) மூலம் நடை பெறும்.
அதில் தேர்வாகும் இளைஞர்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்களில் தொழில்முறை பயிற்சிக்கான முழுமையான புலமைப்பரிசில் (scholarship) ரூ.50,000 மதிப்பில், சமுர்த்தி திணைக்களத்தின் நிதி உதவியுடன் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் முக்கிய இலக்கு, NVQ நிலை 3 (Level 3) பயிற்சி வழங்குவது மட்டுமன்றி, NVQ நிலை 4 (Level 4) நோக்கிலும் மாணவர்களை வழிநடத்துவதாகும்.
குறிப்பாக, இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா துறையில் உள்ள 20,000 வேலைவாய்ப்புகளை நிரப்பும் நோக்குடன் இந்த பயிற்சி திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
கடனுதவி..
மேலும், தனியார்மயமாக (entrepreneurship) தொழில்முயற்சி செய்ய விருப்பமுள்ள இளைஞர்களுக்கு, தொழில் பயிற்சியும், குறைந்த வட்டி வீதத்தில் கடனும் வழங்கப்படும்.
📌 பதிவுகள் தற்போது www.nextsrilanka.lk இணையதளத்தில் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், குறித்த திட்டத்தில் இணைய விரும்பும் இளைஞர் யுவதிகளுக்கான பதிவுகள் தற்போது www.nextsrilanka.lk இணையத்தளத்தில் திறக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |