பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்
கெகிராவ-பலாகல குடா ஹெட்டியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தாண்டு தின மரதன் ஓட்டப் போட்டியில் பத்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
10 வயதுடைய தனுக லக்ஷன் என்ற மாணவனே உயிரிழந்துள்ளதாகவும், அவர் பலாகல மகா வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவன் திடீரென வீதியில் விழுந்த சிறுவன்
குறித்த சிறுவன் இன்று (22) காலை மரதன் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்ட தனது சகோதரருக்கு ஆதரவாக ஓடிய வேளையில் சிறுவன் திடீரென வீதியில் விழுந்துள்ளார்.

இதனை தொடர்ந்து உடனடியாக கலாவெவ கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் மரணத்திற்கான காரணம்
சிறுவனின் மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகாத நிலையில், பிரேத பரிசோதனை கெக்கிராவ வைத்தியசாலையில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.