வாகன கடன் பெற உள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு
வாகனங்களுக்கான நிதி வசதிகளை வழங்கும் போது பின்பற்றப்பட வேண்டிய செயன்முறைகளை புதுப்பித்து, மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) புதிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய இலத்திரனியல், ஹைபிரிட் உட்பட எரிசக்தியை அடிப்படையாக கொண்ட முன்னைய வகைப்படுத்தல்கள் நீக்கப்பட்டுள்ளன.
இலத்திரனியல் பிரிவின் கீழ் வாகனத்தின் பெறுமதியில் 90 வீதம் வரை நிதி வசதியை பெறும் சந்தர்ப்பம் வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதுடன், வணிக வாகனங்களுக்கென 80 வீதமும், மோட்டார் வாகனங்கள், SUV மற்றும் வேன்களுக்கென 60 வீதமும், முச்சக்கர வண்டிகளுக்கென 50 வீதமும் வேறு வாகனங்களுக்கென 70 வீதமுமமாக நிதி வசதி கிடைக்கப்பெறவுள்ளது.
நிதி வசதி
இலத்திரனியல் இல்லாத வணிக வாகனங்களுக்கென கிடைக்கப்பெற்ற 90 வீத நிதி வசதியை பெறுவதற்கான சந்தர்ப்பம் 80 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதுவரை இலத்திரனியல் இல்லாத மோட்டார் கார் மற்றும் SUV, வேன்களுக்கென காணப்பட்ட 50 வீத கடன் எல்லை 60 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இலத்திரனியல் அல்லாத முச்சக்கர வண்டிகளுக்கென நிதி வசதியை பெறுவதற்கு காணப்பட்ட சந்தர்ப்பம் இன்று முதல் 50 வீதமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.