தேங்காய் தட்டுப்பாடுக்கு புதிய தீர்வு!
தேங்காய் கீரல்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான அறிக்கையொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் இஷாந்த ரணதுங்க(Ishantha Ranatunga) தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் கைத்தொழில், தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் மற்றும் பெருந்தோட்டம், சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கமைய, அமைச்சரவையினால் இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இறக்குமதி
இந்த நிலையில், சுமார் 200 மில்லியன் தேங்காய்களுக்கு சமமான கொள்ளவைக் கொண்டுள்ள, தேங்காய்ப்பால், தேங்காய் தூள் மற்றும் குளிர்படுத்தப்பட்ட தேங்காய் கீரல்கள் ஆகிய மூன்று வகையீடுகளின் கீழ் இவ்வாறு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டின் ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில், குறையும் விளைச்சலுக்கு ஈடு செய்யக் கூடிய வகையில் இவ்வாறு தேங்காய் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இரண்டு நோக்கங்களின் அடிப்படையில் இந்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உற்பத்தியாளர்கள் தடையின்றி உற்பத்திகளை மேற்கொள்ள தேவையான மூலப்பொருட்களை பெற்றுக் கொள்ளவும் சந்தையில் தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் பாதிக்கப்படாது இருப்பதனை உறுதி செய்யவும் இந்த இறக்குமதி மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |