கட்டுநாயக்க விமான நிலையத்தில் நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு புதிய முனையம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானப் பயணிகளின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நிலையான முனையத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த திட்டம் தொடர்பில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தனது உத்தியோக பூர்வ பேஸ்புக் தளத்தில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
குறுகிய காலத்திற்குள் நிர்மாண பணி
இந்த நாட்களில் ஏறக்குறைய 25000 விமானப் பயணிகள் வெளியேறி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதால் பாரிய பயணிகள் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளதாக நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதற்கு தீர்வாக தற்போது இரண்டாவது முனையம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அதுவரை தீர்வாக முன் நிறுவப்பட்ட முனையத்தை அமைக்க விமான நிலையமும் தனியார் விமான நிறுவனம் ஒன்றும் முடிவு செய்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிர்மாணத்திற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், 06 மாத குறுகிய காலத்திற்குள் நிர்மாணத்தை நிறைவு செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நிமல் சிறிபால டி சில்வா மேலும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |