பொய்யான தகவலுக்கு விளக்கமளித்துள்ள பொலிஸார்!
பேருந்து ஓட்டுநர்கள் ஆசனப்பட்டிகள் அணிவதை கட்டாயமாக்கும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை இலங்கை பொலிஸ் மறுத்துள்ளது.
அத்தகைய புதிய விதிமுறை எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், ஆசனப்பட்டிகள் அணிவது 2011 முதல் நடைமுறையில் உள்ளது என்றும் பொலிஸ் தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
நடைமுறையிலுள்ள சட்டம்
இந்தநிலையில், பொதுப் போக்குவரத்து மற்றும் பிற வாகன ஓட்டுநர்கள் ஆசனப்பட்டியல் அணிவது 2011 ஆகஸ்ட் 9, அன்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியின் கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனினும் சில ஊடகங்கள் ஒரு புதிய சட்டம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டதாக பொய்யாகக் கூறி, நீண்ட நேரம் ஆசனப்பட்டியை அணிவதால் ஏற்படக்கூடிய உடல்நல அபாயங்கள் குறித்து கவலைகளை எழுப்பியதாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளது.
இது ஒரு புதிய சட்டத் தேவை அல்ல, மாறாக நாள் தோறும் ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்த வலியுறுத்தப்படும் நீண்டகால விதி என்றும் பொலிஸ் தரப்பு வலியுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |