கிராமசேவகர் பிரிவுகளில் புதிய நடைமுறை!
நாட்டில் உள்ள கிராமசேவகர் பிரிவுகளில் மக்களுக்கு மிகவும் அவசியமான விண்ணப்பப் படிவங்களை மும்மொழிகளிலும் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அதன்படி, மக்களுக்கு தேவையான 22 விண்ணப்பங்கள் தற்போது மும்மொழிகளிலும் பிரசுரிப்பதற்கு தயார்நிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூன்று மொழி
இது தொடர்பில் ஊடகமொன்று அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் மாதத்தில் இருந்து அரசதுறையின் அனைத்துப் படிவங்களையும் பொதுமக்கள், மூன்று மொழிகளிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

கிராமசேவகர் பிரிவில் மக்களுக்கு மிகவும், அத்தியாவசியமான சில விண்ணப்பங்கள் இருக்கின்றன. அவை பல இடங்களில் சிங்கள மொழியில் மாத்திரமே இருப்பதை தமது அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.
வடக்கில் அவை தமிழ் மொழியில் கிடைத்தாலும், ஏனைய மாவட்டங்களில் தமிழ் மக்களுக்கு அவை தமிழ் மொழியில் கிடைப்பதில்லை. எனவே, அவர்களின் நலன்கருதி, மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான 22 விண்ணப்பங்கள் தற்போது மூன்று மொழிகளிலும் தயார் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.