கிழக்கு மாகாண ஆளுநரால் இருவருக்கு புதிய பதவி நியமனம்
Sri Lanka
Senthil Thondaman
Eastern Province
By Fathima
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் இருவருக்கு புதிய பதவி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் உள்ளூராட்சி ஆணையாளராக பதவி வகித்த நாகராசா மணிவண்ணனுக்கு உள்ளூராட்சி அமைச்சின் பதில் செயலாளராக பதவி மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) பதவி வகித்த ஏ.மன்சூருக்கு வீதி அபிவிருத்தி அமைச்சின் பதில் செயலாளராகவும் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பிரதம செயலாளரின் பரிந்துரை
குறித்த பதவிகளை நியமிக்க பிரதம செயலாளரால் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
இந்த பரிந்துரையை ஏற்ற செந்தில் தொண்டமான் இருவருக்கும் நியமனம் வழங்கியுள்ளதாக ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.