கிழக்கில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையும் சுயேட்சை குழு
திகாமடுல்ல மாவட்ட, முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரான எம்.எச்.எம். அல்-இஹ்ஸான், எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் சுயேட்சையாக களமிறங்குவிருக்கும் பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீருடன் இணைந்து கொண்டுள்ளார்.
இந்நிகழ்வு சம்மாந்துறையில் அமைந்துள்ள காரியாலயத்தில் உத்தியோகபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது இஹ்ஸான் கருத்து தெரிவிக்கையில்,
அம்பாறை மாவட்டத்தில் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் மக்கள் நலன் சார்பானவை.
இரு கட்சிகள் இணைவு...
எனவே தான் இவ்வாறான மக்கள் சமூக சேவகனுக்கு எனது ஆதரவினை பகிரங்கமாக தெரிவித்து கொண்டுள்ளேன்.
பிரதேச அபிவிருத்தி இளைஞர்கள் வேலைவாய்ப்பு மற்றும் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் களமிறங்குவிருக்கும் நாபீரின் நல்ல முயற்சிகளுக்கு இரண்டிற்கும் தொடர்ந்து ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
உதுமான்கண்டு நாபீரின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சுயேட்சை குழுவில் உள்ளுராட்சி தேர்தலில் களமிறங்குவது தொடர்பாகவும் கட்சியின் செயற்பாட்டினை எவ்வாறு விஸ்தரித்தல் மற்றும் அம்பாறை மாவட்டம் தவிர்ந்த ஏனைய கிழக்கு மாகாணத்தின் திருக்கோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் போட்டியிடுவது தொடர்பான வியூகங்களை அமைத்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், இக்கலந்துரையாடலில் கட்சியின் அரசியல் செயற்பாட்டாளரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.துல்கர் நயீம் உட்பட முன்னாள் சம்மாந்துறை நகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |







