இலங்கையில் அறிமுகமாகும் 100 ஒக்டேன் ரக பெட்ரோல்
லங்கா ஐஓசி நிறுவனம் 100 ஒக்டேன் ரக பெட்ரோலை இன்று (02) சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தனது X கணக்கில் குறிப்பொன்றையிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனத்தின் தலைவர்கள்
லங்கா ஐஓசி நிறுவனத்தின் தலைவர்கள் குழுவொன்று தம்மை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Chairman of Lanka IOC & the senior Managment visited the Ministry of Power & Energy yesterday.
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 2, 2024
Lanka IOC will be launching a 100 Octaine premium product to the market today. We discussed the development plans of the retail outlet network of LIOC, tank farm development,… pic.twitter.com/H9zOHlt4MW
இலங்கை ஐஓசி எரிபொருள் நிலைய விஸ்தரிப்புத் திட்டம், மசகு எண்ணெய் சந்தை, எண்ணெய் தாங்கி வளாக அபிவிருத்தி, எரிபொருள் விலை சூத்திரம் மற்றும் உத்தேச இந்தியா - இலங்கை எரிபொருள் குழாய் திட்டம் குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW ! |