ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனை! புதிய சட்டம் அறிமுகம்

Ranil Wickremesinghe Government Of Sri Lanka Sri Lanka Government Local government Election
By Fathima Jun 13, 2023 10:00 AM GMT
Fathima

Fathima

தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டம் என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.  

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனை

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனை! புதிய சட்டம் அறிமுகம் | New Low For Election In Sri Lanka

புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூல வரைவொன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் சட்டம், உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்டம், ஜனாதிபதி தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் சட்டம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கு கடந்த வருடம் டிசம்பர் 12ஆம் திகதி அமைச்சரவை தீர்மானித்தது.

எவ்வாறாயினும், சட்டங்களை தனித்தனியாக திருத்துவதற்கு பதிலாக, புதிய தேர்தல் சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது என கூறியுள்ளார்.