அத்தியாவசிய சேவைகள் சீர்குலைக்கப்படுவதனை தடுக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

Bandula Gunawardane Attorney General of Sri Lanka
By Mayuri Jul 11, 2024 09:45 AM GMT
Mayuri

Mayuri

சுகாதாரம், கல்வி, போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை சீர்குலைக்கும் முயற்சிகளை தடுப்பது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

புதிய சட்ட ஏற்பாடுகளின் மூலம் இவ்வாறான நாச வேலைகளை தடுத்து நிறுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய சேவைகளை குழப்புவதை தடுப்பதற்கு அரசாங்கம் தலையீடு செய்யக்கூடிய வகையில் சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபரிடம் ஆலோசனை

இது தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ள உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய சேவைகள் சீர்குலைக்கப்படுவதனை தடுக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கை | New Laws To Control Strikes

இந்த புதிய ஏற்பாடுகளின் ஊடாக மக்கள் அச்சமின்றி தங்களது அன்றாட வாழ்க்கையை முன்னெடுக்கவும் வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மக்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு ஒன்று வழங்குவதற்கு கவனம் செலுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW