கனடாவில் வாடகைக்கு குடியிருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

Canada
By Raghav Jul 22, 2024 08:52 PM GMT
Raghav

Raghav

கனடா (Canada) ரொறன்ரோ வாடகை என்ற போர்வையில் நடக்கும் மோசடிகளை தடுப்பதற்கு கனேடிய அரசாங்கத்தால் புதிய சட்டமொன்று உருவாக்கப்படவுள்ளது.

ரொறன்ரோவில் வாடகை வீட்டில் வசிப்போரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் சில அநீதியான விடயங்களை கருத்தில் கொண்டு இந்த புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 

ரொறன்ரோவில் வீடுகளை பழுதுபார்த்தால் மற்றும் புதுப்பிப்பதாக கூறி வாடகை வீட்டில் குடியிருப்போர் ஒப்பந்த காலத்திற்கு முன்னதாகவே அங்கிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.

வாடகை

கூடுதல் தொகைக்கு வீட்டை வாடகைக்கு விடும் நோக்கின் இவ்வாறு வாடகை குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் வாடகைக்கு குடியிருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் | New Law To Be Intoduced In Canada To Defend Renter

எனவே, இந்த சட்டம், ரொறன்ரோவில் வாடகைக்கு குடியிருப்போரை, இவ்வாறான காரணங்களால் வீட்டு உரிமையாளர்கள் திடீரென வீட்டை விட்டு வெளியேற்றுவதனை தடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த புதிய சட்டமானது எதிர்வரும் 2025ஆம் ஆண்டளவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW