தொலைபேசி விற்பனை செய்யும் நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

Sri Lanka Mobile Phones
By Mayuri Jul 28, 2024 12:11 PM GMT
Mayuri

Mayuri

உரிமம் பெறாமல் தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதிக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

திருத்தப்பட்ட தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை சட்டத்தின் மூலம் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆணைக்குழுவிற்கு சிரமம்

தொலைபேசி விற்பனை நிலையங்கள் பதிவு செய்யப்படாமை அதிகரித்துள்ளமையினால், தொலைபேசி விற்பனையை ஒழுங்குபடுத்துவதில் ஆணைக்குழுவுக்கு சிரமம் ஏற்பட்டமையினால் இந்த அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.

தொலைபேசி விற்பனை செய்யும் நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | New Law On Cell Phones

அதன்படி, இனிமேல் உரிமம் பெறாத கடைகளுக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும், பதிவு பெறும் கடைகள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW